Friday, December 13, 2019

சுவர் சித்திரம் ஸ்ரீ லங்கா - Wall Art Sri Lanka (Street Art)


எமது நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளில் ஒன்றாக நாட்டின் சுற்றுச் சூழலை சுத்தப்படுத்தும் வேலைத் திட்டத்தை ஆரம்பித்து அதனை குறித்த தரப்பினர் நாடு முழுக்க செயற்படுத்தி வருவதை நாம் அறிவோம். அதன் மற்றுமொரு கட்டமாக சுவரொட்டிகளினாலும், பாசிகளினாலும் அழுக்கடைந்தும் அசிங்கமாகவும் இருக்கின்ற வெற்றுச் சுவர்களை சுவர் சித்திரம் கொண்டு வாலிபர்களும், சமூக நலன் விரும்பிகளும் அலங்கரித்து வருவதையும் நாம் அறிவோம். இவ்விடயத்தில் தாய் நாட்டை நேசிக்கும் நாமும் நாட்டின் பொது நலன் விடயங்களில் அவசியம் பங்களிப்புச் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் எமது பங்களிப்பும் இன்றியமையாததாகும்.

இவ்விவகாரமானது அரசியல் ரீதியாக நோக்காமல் சமூக ரீதியாகவே நோக்கப்படல் வேண்டும். அத்துடன் நாம் எமது பிரதேச பொதுச் சுவர்களை காலியாக வைக்கும் போது வேறு சில ஆர்வலர்கள் அதில் ஏதாவது பொறுத்தமில்லாதவற்றை வரையவும் நிறைய சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. இதனால் முறுகல் நிலைகளும் ஏற்படலாம் என்ற பல நோக்கங்களின் அடிப்படையிலே தான் இத்திட்டம் ஆரம்பிக்கப்படுகிறது.

நோக்கம்:
பொது நலன் விடயங்களில் ஒன்றுபட்டு செயற்படலும், நல்லிணக்கத்திற்காக ஒத்துழைப்பதுமே எமது பிரதான நோக்கங்களாகும்.

கூட்டுத் திட்டம் அல்லது கூட்டமைப்பு:
இத்திட்டத்தை அவ்வப்பிரதேச பொது அமைப்புக்கள், நிறுவனங்கள் சகலரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக செயற்படுத்தப்படல் வேண்டும். குறிப்பாக அவ்வப்பிரதேச ஜம்இய்யத்துல் உலமா, மஸ்ஜித் சம்மேளனங்கள், இஸ்லாமிய தஃவா அமைப்புக்கள் ஆகியவைகள் இத்திட்டத்தை முன்னின்று நடாத்த ஆவண செய்தல் வேண்டும்.

திட்டத்திற்கான சில வழிகாட்டல்கள்:
•முஸ்லிம்கள் பல்லின சமூகங்களுடன் கலந்து வாழும் பிரதேசங்களில் அவர்களுக்கே வரைதல் போன்ற விடயங்களுக்கு முன்னுரிமை வழங்குவதுடன் அதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குதல்.

•முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் நாம் முன்னின்று மற்றவர்களையும் இணைத்துக் கொண்டு செயற்படல்.

•தாங்களாகவே வரைய வேண்டிய சூழ்நிலைகளில் வரைவதற்கான காட்சிகளை அவ்வப்பிரதேச ஆலிம்களிடம் ஆலோசனைகளைப் பெற்று தெரிவு செய்தல்.

•மலைகள், குண்றுகள், மர செடி கொடிகள், காலைக் காட்சி (சூரியன் உதித்தல்) மாலைக் காட்சி (சூரியன் மறைதல்) புத்தகங்கள், போதை வஸ்துக்களை அழித்தல், தர்மம் செய்தல் (கை மற்றம் பணம்) போன்றவற்றை வரையலாம்.

•வெறுமனே காட்சிகள் மட்டுமன்றி பொறுத்தமான, சுத்தமான இடமாக இருந்தால் சகவாழ்வு, மனிநேயம், ஒழுக்கம் பற்றிக் கூறும் திருக்குர்ஆன் வசனங்களின் சிங்கள மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புக்களையும் எழுதலாம்.

•அல்லது பொதுவான வழிகாட்டல் வசனங்களை எழுதுதல். (புகை ஆரோக்கியத்திற்கு பகை ஃ பாதை ஒழுங்ககளையும் சட்டங்களையும் மதிப்போம்)

•ஷிர்க், கேலிக்கை, பொய், ஆபாசம் பிற சமூகத்தாரின் மனம் நோவினை அடைதல் போன்றவைகளை சித்தரிக்கும் காட்சிகளைத் தவிர்த்தல்.

காட்சிகளை தெரிவு செய்தலும், வரைதலும்:
சித்தரங்களை இடத்திற்கு ஏற்றவாறு தெரிவு செய்து கொள்ளல் வேண்டும்.

1. பொது இடங்கள்
2. பள்ளிவாசல் சுவர்கள்
3. மையவாடி மதில்கள்
4. பாடசாலை மற்றும் மத்ரஸாக்களின் மதில்கள்
5. வியாபார ஸ்தளங்களும், கடைத் தெருக்களும்

பொது இடங்கள்: பாதை ஒழுக்கங்கள், புகைத்தலின் கேடுகள், மத நல்லிணக்கம், பிறருக்கு உதவுதல் போன்றவைகளைச் சித்தரிக்கும் காட்சிகள் அல்லது வாசகங்கள்.

பள்ளிவாசல் சுவர்கள்: சக வாழ்வு, மத நல்லிணக்கம், மனித நேயம், பொறுத்தமான வாசகங்கள் போன்றவைகளைச் சித்தரிக்கும் காட்சிகள் அல்லது வாசகங்கள்.

மையவாடி மதில்கள் : மறுமை வாழ்வு, மரணம், நிறந்தரமற்ற வாழ்வு, வாழ்வின் நோக்கம். பிறரை மதித்தல்.

பாடசாலை மற்றும் மத்ரஸாக்களின் மதில்கள் : கல்வியின் சிறப்பு, கற்றலின் அவசியம், ஆசானின் கண்ணியம், பெற்றாரின் கண்ணியம்.

வியாபார ஸ்தளங்களும், கடைத் தெருக்களும் : வியாபாரத்தில் நேர்மை, பொய் கூடாது, நேர்மை, நல்லிணக்கம், சகவாழ்வு, பிறரை மதித்தல், புகைத்தலின் கேடு போன்றவைகளைச் சித்தரிக்கும் காட்சிகள் அல்லது வாசகங்கள்.

ஓவியர்கள்:
சித்திரங்களை வரைய பாடசாலை மற்றும் மத்ரஸா மாணவர்களை பயன்படுத்தலாம். இதன் மூலம் வளர்ந்து வரும் எமது சந்ததியினர் இவ்வடிப்படையில் தான் உருவாகின்றனர் என்ற ஒரு செய்தியும் பிற சமூகத்தினரைப் போய்ச் சேரும் என்பது உண்மை.

காட்சிகளை வரைய ஆரம்பிக்கும் நிகழ்வு:
வரைய ஆரம்பிக்கும் முன் ஒரு ஆரம்ப நிகழ்வை ஏற்பாடு செய்து கொள்ளல் சிறந்தது. அதற்கு அதிகாரமுள்ள அரச தரப்பு அதிகாரிகள் (கிராம உத்தியோகத்தர், பிரதேச செயலக செயலாளர், பொலிஸ் ஓ.ஐ.சி. சர்வ மத குருமார்கள்) அழைக்கப்பட்டு தமது சித்திரம் தொடர்பாகவும் அவர்களுக்கு விளக்கப்படுத்தி ஆரம்பிக்கலாம். 

ஊடகங்களுக்கு அறிவித்தல்:
குறித்த செயற் திட்டத்தை முஸ்லிம்களும் கட்சி, இன மத பேதமின்றி செயற்படுத்துகிறார்கள் என்ற செய்தியை ஊடகங்களுக்கு வழங்குதல்.

சுவர் சித்திரம் ஸ்ரீ லங்கா - Wall Art Sri Lanka (Street Art)

எமது நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளில் ஒன்றாக நாட்டின் சுற்றுச் சூழலை சுத்தப்படுத்தும் வேலைத் திட்டத்தை ...